Skip to main content

திருமுருகன் காந்தி மீண்டும் கைது!

Published on 10/08/2018 | Edited on 10/08/2018
tm

 

நேற்று பெங்களூரில் கைது செய்யப்பட்ட மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

 அனுமதியின்றி பேரணியாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்றதாக, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.  ராயப்பேட்டை போலீசார் திருமுருகன் காந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு ஜெர்மனியிலிருந்து  நேற்று அதிகாலை பெங்களூர் திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் பெங்களூர் போலீசார் அவரை கைது செய்தனர். சென்னையிலிருந்து 10க்கும் மேற்பட்ட போலீசார் பெங்களூர் சென்று திருமுருகன் காந்தியை நேற்றிரவு சென்னை அழைத்துவந்தனர். கைது செய்த திருமுருகன் காந்தியை போலீசார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரகாஷ், திருமுருகன் காந்தியை அவசர அவசரமாக கைது செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.  திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்த நீதிபதி, தேவைப்பட்டால் 24 மணி நேரத்துக்குள் அவரை போலீஸ் விசாரிக்கலாம் என்றும் கூறினர்.   இந்நிலையில்,  2017ல் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் திருமுருகன் காந்தி.

 

  தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி கைது செய்யப்படுவதாக மே-17 இயக்கத்தினர்  குற்றம்சாட்டுகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்