Published on 01/06/2018 | Edited on 01/06/2018
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசுவை கடந்த 29ஆம் தேதி ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். தூத்துக்குடி ரத்தினபுரியில் வியனரசுவை சிப்காட் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அவர் மீது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ஆம் தேதி நடந்த போராட்டத்தின்போது ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பில் தீ வைத்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் தூத்துக்குடி ஜெ.எம்.1 குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பேரூரணி சிறையில் போலீசார் அடைத்தனர்.