ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி தருவது பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (26/04/2021) காலை 09.15 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாமே என உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், இந்த ஆலோசனை நடைபெறுகிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் யார் யார் பங்கேற்பு?
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கனிமொழி எம்.பி., பாஜக சார்பில் மாநில தலைவர் எல்.முருகன், கட்சியின் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன் ஆகியோர் பங்கேற்கின்றனர். அதேபோல் தேமுதிக, பாமக, உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை முன்பு 100- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.