Skip to main content

இந்த வருடம் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழா நடைபெறுமா?- மாவட்ட நிர்வாகம் பதில்!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

 

festival

 

தூத்துக்குடியில் விமர்சையாக 10 நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவாக இருப்பது தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய விழா. கரோனா காரணமாக திருவிழாக்கள், சமய விழாக்கள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வருடம் தூய பனிமய மாத பேராலய விழா நடைபெறுமா என்ற கேள்வி இருந்தது. இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படும் எனத் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய விழா ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படும். அனைத்து நிகழ்ச்சிகளும் காணொளி மூலம் சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பப்படும் எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொடியேற்றம் உட்பட 10 நாட்கள் நடைபெறும் விழாவும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறும். தூய பனிமய மாதா பேராலய கொடியேற்ற விழா நிகழ்ச்சியில் பங்குத் தந்தைகள் 15 பேர் மட்டுமே பங்கேற்பார்கள். 26 ஆம் தேதி முழு முடக்கம் என்பதால் கண்டிப்பாக மக்கள் வீட்டிலிருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்