Skip to main content

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம்

Published on 07/01/2019 | Edited on 07/01/2019

 

tt

 

ஜனவரி 28-ம் தேதி நடக்கவிருந்த திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்வதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கஜா புயலால் பெரிதும் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் பொங்கல் பண்டிகையும் வருகிறது இந்த சூழ்நிலையில் தேர்தலை நடத்தினால் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நிவாரணம் பாதிக்கப்படும் என்றும், அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுவதால் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என்றும் அதனால் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

 

இதனால், தேர்தலை நடத்தக்கூடிய சூழ்நிலை தற்போது இருக்கிறதா என்று தலைமை தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அறிக்கை ஒன்றை கேட்டிருந்தது. இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை மாவட்ட தேர்தல் ஆணையம் முக்கிய கட்சிகளின் பிரமுகர்களிடம் கருத்தும் கேட்டது. அதில் திமுக, அதிமுக உட்பட முக்கிய கட்சிகள் தற்போது தேர்தல் வேண்டாம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இருந்தனர்.

 

 

மேலும் திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் இன்று காலை தலைமை தேர்தல் ஆணையம் திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்