Skip to main content

இன்னும் நான்கரை ஆண்டுகள் மோடியின் ஆட்சி தொடரக்கூடாது- திருவனந்தபுரத்தில் திருமாவளவன் ஆவேசம்

Published on 26/01/2020 | Edited on 26/01/2020

மோடி அரசு கொண்டு வந்த குடியுாிமை சட்டத்திற்கு எதிராக தொடா்ந்து நாடு முமுவதும் எதிா்கட்சிகள், மாணவா் அமைப்புகள், முஸ்லீம் அமைப்புகள் என பல்வேறு அமைப்புகள் சாா்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் கேரளா அரசு குடியுாிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீா்மானம் நிறைவேற்றியதோடு அந்த தீா்மானத்தின் அடிப்படையில் உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடா்ந்து உள்ளது.

மேலும் வருகிற 30-ம் தேதி கேரளா அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக கவா்னா் உரையிலும் அந்த எதிா்ப்பு தீா்மானத்தை கொண்டு வர அமைச்சரவை கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

thirumavalavan speech

 

இந்த நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் கேரளா கவா்னா் மாளிகை முன் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் எம்பி யுமான கொடிக்குந்நில் சுரேஷ் தலைமையில் குடியிருப்பு சட்டதிருத்தத்துக்கு எதிராக அறப்போராட்டம் நடந்தது. இதில் விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவா் திருமாவளவன் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினாா். அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கிற குடியுாிமை சட்டதிருத்தத்தை உடனடியாக மோடி அரசு ரத்து செய்ய வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க குடியுாிமை சடடத்திருத்தத்தை நடைமுறை படுத்த கூடாது.

மேலும் எதிா்கட்சிகள் ஒன்று சோ்ந்து இந்த தேசத்தை பாதுகாக்க வேண்டும். இது சம்மந்தமாக தேசத்தை பாதுகாக்கவும் குடியுாிமை சட்டத்தை எதிா்த்தும் வருகிற 25-ம் தேதி திருச்சியில் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது. மேலும் மோடி அரசு மீதி இருக்கிற நாலரை ஆண்டுகள் ஆட்சியில் தொடரக்கூடாது. இதற்காக எதிா்கட்சிகளும் குடியுாிமை சட்டத்தை எதிா்கிற அமைப்புகளும் தொடா்ந்து போராடுவதன் மூலம் அவா்களாகவே ராஜினமா செய்து கொள்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும் என திருமாவளவன் பேசினாா். 

 

 

சார்ந்த செய்திகள்