driver threw the person who was fighting for his life on side of  road

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய நுழைவாயில் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர் மீது பேருந்து ஒன்று மோதிவிட்டுச் சென்றுள்ளது. இதனால் படுகாயம் அடைந்து கீழே கிடந்த அந்த நபரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே, தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடிப்பட்டது யார்?, எந்த பேருந்து மோதியது? என்று விசாரணை நடத்தினர். மேலும், பேருந்து நிலையம் அருகே உள்ள சிசிடிவி கட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பெங்களூரிலிருந்து ஊட்டிக்குச் சுற்றுலா வந்த தனியார் பேருந்து ஒன்று அந்த நபர் மீது மோதியது தெரியவந்தது. மேலும் அந்த சிசிடிவி காட்சியில் அந்த நபரை மோதி விபத்து ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர், மட்டும் அவருடன் இருந்த இருவரும் படுகாயமடைந்த நபரைச் சாலையோரம் தூக்கி வீசியெறிந்துவிட்டுச் செல்வது பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுற்றுலா பேருந்து ஓட்டுநர் சிவராஜ் மற்றும் அவருடன் இருந்த பேருந்தின் க்ளீனர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய பேருந்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.