Skip to main content

"மண், விவசாயிகளைக் காக்கும் வகையில் சட்டம் இல்லை" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

"There is no law to protect the soil and farmers" -  Chief Minister MK Stalin's speech in the Legislative Assembly!

 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களில் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றனர். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் அமைச்சர்கள் விளக்கமளித்து வருகின்றனர்.

 

அந்த வகையில், இன்றைய விவாதத்தின்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில் மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மூன்று சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக உள்ளது. மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களும் உள்ளன. மண்ணையும், விவசாயிகளையும் காக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் இல்லை. சுதந்திர இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் போன்று எழுச்சிமிகு போராட்டம் நடந்ததில்லை. மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும். மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டு வந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. வியர்வைச் சிந்தி விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது" என்றார். 

 

ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ஏழாவது மாநிலமாக தமிழ்நாட்டிலும் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனிடையே, சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்