Skip to main content

அரசு சம்பளம் கொடுத்தும் அதைப் பெறமுடியாமல் தவிக்கும் பகுதி நேர ஆசிரியர்கள்!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020


அரசு சம்பளம் வழங்கியும் பெறமுடியாமல் 11,700 பகுதிநேர ஆசிரியர்கள் தவிப்பு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். 
 

v

பி.கே.இளமாறன்

 

16549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூபாய் 5000 சம்பளத்தில்  தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் மார்ச் 2012 ஆண்டு நியமிக்கப்பட்டார்கள்.    பல்வேறு காரணங்களினால் பணியிலிருந்து விலகலுக்குப் பிறகு தற்போது 11,700 பேர் மாநிலம் முழுவதும் உடற்கல்வி, ஓவியம், இசை ஆசிரியர்களாக மாதத்திற்கு 12 நாள்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போதைய சம்பளம்  ரூ.7700 வழங்கப்பட்டு வருகிறது.

 

சம்பளம், மாநிலத்திட்ட இயக்குநரகம் மூலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு வட்டார வளமையம் மூலமாகப் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) கணக்கில் வரவு வைக்கப்படும். அந்தக் கணக்கினைப் பள்ளித் தலைமையாசிரியரும், பள்ளி மேலாண்மைக்குழு SMC தலைவரும் நிர்வகிப்பர். இவர்கள் இருவரின் கையொப்பமிட்ட காசோலையினைப் பகுதிநேர ஆசிரியர்களுக்குரிய மாதச் சம்பளமாக அவரவர் வங்கிக் கணக்கில்  ECS மூலமாக வழங்கிவருவது வழக்கத்தில் உள்ளது.

 

http://onelink.to/nknapp


இம்முறை கரோனா தடுப்பு நடவடிக்கை 144 தடை உத்தரவால் மார்ச் மாதச் சம்பளக் காசோலையில் கையெழுத்திடும் தலைமையாசிரியரும் SMC தலைவரும் பள்ளிக்கு வராததால் பள்ளிக்கணக்கில் சம்பளப் பணத்தினைச் செலுத்திய பிறகும் பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளம் வங்கியில் அவரவர் கணக்கில் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.


இதனால் நெருக்கடியான சூழலில் சம்பளமின்றி தவித்துவருகிறார்கள்.எனவே SMC கணக்கில் இருந்து பகுதிநேர ஆசிரியர்கள் வங்கிக் கணக்கில் சம்பளம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுத்தும், இனிவரும் காலங்களில் வட்டார வளமையங்கள் மூலமாகப் பகுதிநேர ஆசிரியர்களின் வங்கிக் கணக்கில் நேரிடையாக வரவுவைக்க ஆவனம் செய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் கேட்டுக்கொண்டார்.

 

சார்ந்த செய்திகள்