Skip to main content

டாஸ்மாக் பார்களில் விற்கப்படும் போலி மதுபானம்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Tasmac is a fake liquor sold in bars

தமிழ்நாட்டில் உள்ள பார்களில் போலி மது விற்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. போலி மது தயாரிப்பு கும்பல்,  டாஸ்மாக் கடைகளில் வாங்கி பாரில் மதுவை விற்கும் போது பாட்டிலுக்கு ரூ.50 தான் லாபம் கிடைக்கும். ஆனால், எங்க சரக்கை விற்றால் ஒரு பாட்டிலுக்கு ரூ.100 லாபம் கிடைக்கும் என்று டாஸ்மார்க் பார்களை அனுகி ஆசை வார்த்தை கூறி அணுகுகின்றனர். இந்த கும்பலே எசன்ஸ் ஊற்றி கலந்த மதுவை குவாட்டர், ஆஃப் பாட்டில்களில் தனித்தனியாக அடைத்து, சம்பந்தப்பட்ட பாட்டில்களில் உள்ள நிறுவன பெயரிலேயே லேபிளை ஒட்டி புதிதாக மூடி மற்றும் ஸ்டிக்கர் ஒட்டி ஒரிஜினல் மதுபோலவே தயார்படுத்துகின்றனர். பின் அந்த பாட்டில் மதுவை ரூ.50க்கும், ரூ.80க்கும் மொத்தமாக விறபனை செய்கின்றனர். இதனால் டாஸ்மாக் விற்பனை குறைந்து போலி மது விற்பனை அமோகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் சிவகங்கை மாவட்டத்தில் போலி மது செய்து விற்கும் கும்பல் குறித்து சிறப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, மது தயாரிப்பு கூடம் காலியாக இருந்திருக்கிறது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்திற்கு மாற்றியுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. சென்னை (மதுரை) மண்டல நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி காசிவிஸ்வநாதன், திருச்சி மத்திய மண்டல நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் பல நாட்களாக நடத்திய ரகசிய விசாரணையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பெருமகளூரில் அந்த கும்பல் விற்பனையைத் தொடங்கியுள்ளது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் என்பவரைப் பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் அமரசிம்மேந்திரபுரம் சங்கர், மச்சுவாடி மாரிமுத்து என அடுத்தடுத்து 3 பேரையும் சரக்கு பாட்டில்கள் ஏற்றிச் சென்ற சரக்கு வேன் மற்றும் ஓட்டுநரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிவகங்கையில் எடுத்து வந்த போலி மது தயாரிக்கும் மூலப்பொருட்களான எசன்ஸ், லேபிள், ஸ்டிக்கர், மூடிகள், மூடிகளை லாக் செய்யும் மெசின், ஸ்பிரிட் ஆகியவை புதுக்கோட்டை மாவட்டம் அணவயல் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு விவசாயியின் தோட்டத்தில் உள்ள மோட்டார் கொட்டகையில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தோட்டத்தில் ஆய்வு செய்த போது 4 பேரல் ஸ்பிரிட் மற்றும் அனைத்து மூலப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் கைப்பற்றி ஒரு சரக்கு வேனில் ஏற்றி பட்டுக்கோட்டை மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.