Skip to main content

'தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' -சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published on 08/09/2020 | Edited on 08/09/2020

 

tamilnadu rains chennai meteorological centre

 

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

 

அதன்படி, சேலம், தருமபுரி, நீலகிரி, திருவள்ளூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

அதேபோல், கோவை, திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், மதுரை, புதுச்சேரி (காரைக்கால்) ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தேவாலா (நீலகிரி)- 13.செ.மீ., பந்தலூர் (நீலகிரி)- 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்