Skip to main content

தமிழகத்தில் கரோனா பாதிப்பு... இன்றைய நிலவரம்...

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

tamilnadu corona stats

 

தமிழகத்தில் இன்று புதிதாக 5,995 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்திலிருந்து வருகின்றது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது தினமும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகின்றது.

 

அந்த வகையில் இன்றைய நிலவரப்படி, கடந்த 24 மணிநேரத்தில், தமிழகத்தில் 5,995 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,67,430 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கரோனாவால் 101 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 6,340 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று 5,764 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,07,677 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,282 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்