Skip to main content

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்: உடனடியாக நிறுத்துங்கள் என்றால் எங்கிருந்து மின்சாரம் கிடைக்கும்-தமிழிசை பேட்டி!!

Published on 16/06/2019 | Edited on 16/06/2019

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பான உண்மையை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

இன்று  கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக கூடங்குளம் அணுமின்நிலைய வளாக இயக்குனர் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்ட தமிழிசை சவுந்தரராஜன் .

 

tamilisai

 

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பொழுது,

 

அரசியல் கட்சிகள் இதனால் பெரிய ஆபத்து என்பது போன்று போராட்டங்களை அறிவிப்பது  இயற்கையாக மக்களோடு அரசு நடத்தும் கலந்துரையாடல் முழுமையாக முற்று பெறாதோ என்றே எண்ணத்தோன்றுகிறது.

 

கரெண்ட் நிச்சயமாக வேண்டும் இன்னைக்கு பார்த்தீர்கள் என்றால் 1000 மெகா வாட் இதில் பெரும் பகுதி நமக்கு மின்சாரமாக கிடைக்கிறது. இந்த கழிவுகளை ஒன்றும் செய்யாதீர்கள் உடனடியாக நிறுத்துங்கள் என்றால் எங்கிருந்து மின்சாரம் கிடைக்கும். ஆகவே ஆக்கப்பூர்வாமாக நேர்மறையான சித்தனைகளை நாம் கொள்ளவேண்டும் என்பதே எனது கருத்து என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்