Skip to main content

மாவட்ட ஆட்சியரை அவதூறு பேசியதாக திமுக மா.செ மீது வழக்குப்பதிவு... மற்றொரு மா.செ மீது புகார் கொடுக்க அ.தி.மு.க ஆலோசனை

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

புதுக்கோட்டையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் 17 ந் தேதி மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடந்தது. இதில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பங்கீடு பற்றி முடிவெடுத்தக் கொள்வதாக ஆலோசிக்கப்பட்டது.
 

தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க தெற்கு மா.செ  (பொ) திருமயம் ரகுபதி எம்.எல்.ஏ பேசும் போது..

sues the for DMK slandering the District Collector

 

உள்ளாட்சித் தேர்தலை ஏதாவது காரணம் சொல்லி தி.மு.க நீதிமன்றத்திற்கு சென்று நிறுத்தி விடுவார்கள் என்று அ.தி.மு.க நினைக்கிறது. அது நடக்காது. தி.மு.க உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகவே உள்ளது.  அதாவது ஒரே தொகுதி தொடர்ந்து பொதுதொகுதியாகவும், அதேபோல தொடர்ந்து தனித் தொகுதிகளாகவும் உள்ளது. இதையெல்லாம் காரணம் காட்டி தி.மு.க கோர்ட்டுக்கு போகும் என்று எதிர்பார்க்கிறார்கள். நிச்சயமாக நாங்க போகமாட்டோம்.

அடுத்து மாவட்ட ஊராட்சி குழுவுக்கும் பிரிச்சாச்சு. ஆனால் இப்ப மாவட்டம் பிரிச்சாச்சு. அதன் பிறகு மறு சுழற்சி வரவேண்டும். இப்ப 32 மாவட்டம் பிறகு 37 மாவட்டமாகும். அதில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இதெல்லாம் வச்சு நீதிமன்றம் போக வைக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் போகமாட்டோம். தேர்தலைச் சந்திக்கும் தில் எங்களிடம் உள்ளது.
 

உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார். அதாவது கலைஞர் ஆட்சி காலத்தில் காவிரி – குண்டாறு – வைகை திட்டத்தை செயல்படுத்த சுமார் ரூ. 600 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாயனூரில் தடுப்பணையும் கட்டப்பட்டு ஆரம்பகட்டப்பணிகள் நடந்துள்ளது. 2011 தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க ஆட்சி வந்தது. ஆனால் தி.முக. ஆட்சி வந்திருந்தால் 2012 – 13 லேயே திட்டத்தை தி.மு.க நிறைவேற்றி இருக்கும்.


 

sues the for DMK slandering the District Collector

 

ஆனால் அ.தி.மு.க 2011 ல் கையில் எடுக்காத அ.தி.மு.க அரசாங்கம் இப்ப 2020 ல திட்டம் செயல்படுத்த திட்டம் உள்ளதாக அறிவிக்லாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
 

ரோடு போட மட்டும் தான் பணம் வச்சிருக்காங்க. மற்ற திட்டங்களை செயல்படுத்த பணம் இருக்காது. ஏன்னா, ரோட்ல தான் 20 சதவீதம் கமிசன் கிடைக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ரூ. 600 கோடிக்கு இப்ப ரோடு போடும் பணி ஒதுக்கப்பட்டு அதில் கிடைக்கும் ரூ. 120 கோடியை உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
 

கடந்த சில நாட்களாக நடக்கும் மனு நீதி முகாம் என்பது பிளேயிங் விசிட். 100 நாள் வேலை பெண்களை வைத்து படம் எடுத்துக் கொண்டு போறாங்க. மக்களிடம் வாங்கிய மனு என்ன என்று சொல்ல முடியுமா?  இப்ப தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக இந்த பிளேயிங் விசிட் முகாம் நடத்துறாங்க. அரை மணி நேரத்தில் 2 ஆயிரம் மனு வாங்குவது சாத்தியமா? இன்று நடக்கும் கூட்டுறவு வார விழாவுக்காக பத்திரிகையில் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரங்களில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி எம்.எல்.ஏக்கள் பெயர் இல்லை. கூட்டுறவு துறை அமைச்சர் இந்த விழாவில் கலந்து கொள்கிறார். ஆனால் தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத அறந்தாங்கி ரெத்தினசபாபதி, 

கந்தர்வகோட்டை ஆறுமுகம் ஆகிய எம்.எல்.ஏக்கள் பெயர்கள் உள்ளது. அதனால எங்கள் ஆட்சி வந்ததும் கூட்டுறவு சங்கங்களில் தணிக்கை செய்யப்படும். கூட்டுறவு சங்கங்கள் சரியாக நடக்கவில்லை என்று கலைக்கப்படும். அப்ப வந்து இவர்கள் அத்தனை கூட்டுறவு சங்க தலைவர்களிடம் இருந்தும் இந்த விளம்பரக் கட்டணம் வசூலிக்கப்படும்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்பீர்களா என்ற கேள்விக்கு? ஆட்சியர் அ.தி.மு.க பிரமுகர் ஆகிட்டாங்க. எப்படி விளக்கம் கேட்கிறது என்று கூறினார்.

இந்த வீடியோ கேட்டி நக்கீரன் இணையத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மச்சுவாடிப் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க மாவட்ட வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ஷேக் திவான் புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் திருமயம் தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி மாவட்ட ஆட்சித் தலைவரை அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ளார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் ரகுபதி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் அதே பத்திரிகையாளர் சந்திப்பில் தி.மு.க வடக்கு மா.செ (பொ) வழக்கறிஞர் செல்லப்பாண்டியனும் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.தி.மு.க நிர்வாகி போல செயல்படுவதாக கூறியுள்ளார் என்று அவர் மீதும் புகார் கொடுக்க அ.தி.மு.க வினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்