Skip to main content

'நீட் தேர்வால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கைக்கு மாணவர்கள் வந்துவிட்டார்கள்'-அண்ணாமலை பேச்சு

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

BJP

 

நீட் தேர்வால் அனைவருக்கும் சம வாய்ப்பை மத்திய அரசு சாத்தியமாக்கி உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ''இந்த வருடம் தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு சாதனை வருடம். நீட் ஆரம்பித்த  2016க்கு பிறகு  இந்த ஏழு எட்டு வருடத்தில் இந்த வருடம் தான் அதிகமான குழந்தைகள் நீட் தேர்வு எழுத வருகிறார்கள். தமிழகத்தில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். இந்த வருடம் 18 லட்சம் பேர் இந்தியாவில் நீட் எழுதப் போகிறார்கள். தமிழகத்தில் போன வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் 30 ஆயிரம் மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்குக் கூடுதலாக வந்திருக்கிறார்கள். கடந்த வருடம்  தமிழகத்தில்  ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதினர். இதிலிருந்து என்ன நமக்கு தெரிகிறது என்றால் மாணவர்கள் நீட் தேர்வை முழுமையாக ஏற்றுக்கொண்டு இதன் மூலமாகத்தான் நல்ல ஒரு கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கு வந்திருக்கிறார்கள். அதிலும் அடுத்த சிறப்பு என்னவென்றால் உங்களுடைய தாய்மொழியில் எழுதுவதற்கு ஒரு வாய்ப்பு. இந்தியாவில் இந்தியைத் தாண்டி, ஆங்கிலத்தை தாண்டி, அடுத்து குஜராத்தி, அடுத்து பெங்காலி, நான்காவது பிராந்திய மொழியாக தமிழ் இடம் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் 39 ஆயிரத்து 300 பேர் தமிழ் மூலமாக நீட் தேர்வு எழுதப் போகிறார்கள். இவ்வளவு பேர் நீட் தேர்வு எழுத வந்திருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக இந்த நீட் தேர்வு எல்லோருக்கும் சம வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்