Skip to main content

‘பாத்ரூம் இல்ல.. க்ளாஸ் ரூம் இல்ல..’ - தவிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

students of Government School in Tiruvannamalai are suffering without basic facilities

 

திருவண்ணாமலை அடுத்த தேவனந்தல் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 64 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லை என பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றார்கள்.

 

குறிப்பாக 64 மாணவர்கள் படிக்கும் இடத்தில் கழிவறை வசதி முற்றிலும் இல்லை எனவும் கழிவறைக்காக வெளியிடங்களில் செல்லும் நிலை உள்ளதாகவும், மேலும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து சிமெண்ட் பாகங்கள் உடைந்து விழுவதாகும், இதனால் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும், மேலும் ஒரு கட்டடம் பழுதான நிலையில் இடிக்கப்பட்டும் இதுவரை அந்த கட்டடத்தை கட்டித் தராமல் உள்ளதாகவும், இதனால் ஒரே கட்டிடத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் படிக்கும் நிலை உருவாகி உள்ளதாகவும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

 

இது குறித்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாததைக் கண்டித்து பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்களுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய கட்டட வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்