Skip to main content

நீட் தேர்வெழுத பி.பி.இ. பாதுகாப்பு கவச உடையை அணிந்துவந்த மாணவி...! (படங்கள்)

Published on 14/09/2020 | Edited on 14/09/2020

 

 

மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு நேற்று (13/9/2020) நடந்தது. தனிமனித இடவெளி, முகக்கவசம், தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை கண்டறிதல் போன்ற பல்வேறு பாதுகாப்பு கட்டுபாடுகளுடன் தேர்வு மையத்துக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

 

இதில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு எழுதவந்த மாணவி ஒருவர், பி.பி.இ. என சொல்லப்படும் மருத்துவர்கள் அணியும் பாதுகாப்பு கவச உடயை அணிந்து வந்தார். இது அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

 

தேர்வு மையத்துக்குள் செல்வதற்குமுன் அவருக்கு தேர்வர்களுக்கு நடத்தும் பரிசோதனைகளான எலக்ட்ரானிக் பொருள்கள் கண்டறியும் ‘மெட்டல் ஸ்கேனர்’ மூலம் பரிசோதிக்கப்பட்டு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்