Skip to main content

ஸ்டாலின் சொன்னதில் தவறில்லை: ப.சிதம்பரம் பேச்சு

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

 

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் கேஆர்.ராமசாமி தலைமையில் காரைக்குடி சட்டப்பேரவை தொகுதி கூட்டம் தேவகோட்டையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
 

கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், 
 

நமக்கு எதிராக ஒரு அணி சேர்ந்திருக்கிறது. அதை அணி என்பதா, பிணி என்பதா என சொல்ல தெரியவில்லை. தமிழக அமைச்சர்கள் மீது 216 பக்க ஊழல் பட்டியலை தமிழக கவர்னரிடம் பா.ம.க. வினர் அன்புமணி தலைமையில் புகார் மனு அளித்தனர். தற்போது ஊழல் குற்றம் சாட்டியவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒன்று சேர்ந்ததால் அதை ஊழல் கூட்டணி என ஸ்டாலின் சொன்னதில் தவறில்லை. இவர்கள் பா.ஜனதாவோடு கூட்டணி சேர்ந்ததில்தான் தவறிருக்கிறது.


 

p.chidambaram


தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இயற்கையான அணி. இட ஒதுக்கீடு தான் நமது ஆதாரக்கொள்கைகள். இந்த கொள்கைகள்தான் நம்மை இணைத்திருக்கின்றன. இதற்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா அமைப்புகளால் பேராபத்து வந்திருக்கிறது. அரசியல் சாசனத்தை மாற்றுவார்கள், திருத்துவார்கள்.
 

மீண்டும் பா.ஜனதா ஆட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் இந்திய அரசியல் சாசனம் திருத்தப்படும். பல ஆதாரக்கொள்கைகள் குழிதோண்டி புதைக்கப்படும். இந்திய அரசியல் சாசனத்தை காப்பாற்றுவது முதல் கடமை. 
 

5 ஆண்டு ஓய்வுக்குப்பின் காங்கிரஸ் கட்சிக்கு புதிய சக்தி பிறந்திருக்கிறது, புதிய எழுச்சி பிறந்திருக்கிறது. மகத்தான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற கனவு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி.யை மறு ஆய்வு செய்து ஜி.எஸ்.டி. யை மறு அறிமுகம் செய்வோம். இவ்வாறு பேசினார்

 

 

சார்ந்த செய்திகள்