Skip to main content

தனியார் மதுபான கூடத்தில் சிறுவன்;சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

nn

 

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே பிரபல தனியார் ஹோட்டல் உள்ளது. இங்கு அரசு அங்கீகாரம் பெற்ற மதுபானக் கூடமும் உள்ளது. இங்குள்ள மதுபான கூடத்தில் ஒரு டேபிளில் மூன்று இளைஞர்கள் அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தனர். அதில் ஒருவன் அருகில் சிறுவன் ஒருவன் அமர்ந்துள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சிறுவர்களை மதுக்கடை மற்றும் மதுபானக் கூடங்களில் அனுமதிக்ககூடாது என நீதிமன்றங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன. 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் வழங்குவது சட்டப்படி குற்றம் என்கிற நிலையில் ஒரு சிறுவனை மது அருந்தும் பார்க்குள் எப்படி அனுமதித்தார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. பணம் வந்தால் போதும் என விதிகளை மீறி குடிமகன் ஒருவன் சிறுவனை அழைத்து வந்து மதுபான பார் நிர்வாகம் தடுக்கவில்லை. சுமார் அவர்கள் தடுக்காமல் நிர்வாகமும் அலட்சியமாக செயல்பட்டுள்ளது.

 

தமிழக இளைஞர்கள் அடிமையாகி வரும் நிலையில் மதுபானக் கூடத்தில் சிறுவன் அமர வைக்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடத்துக்கு சிறுவர்களை அழைத்துச் செல்லக்கூடாது எனவும், அவர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது என சட்டம் உள்ளது என்றும், ஆனால் மதுபானக் கூடம் உள்ளே சிறுவனை அனுமதித்தது மட்டுமின்றி, அவன் முன்பு மதுபாட்டில் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும், எதுவும் அறியாத மழலையின் நெஞ்சில், விஷம் விதைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆய்வு செய்து தமிழக அரசும், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

சிறுவர்கள் படிக்கவேண்டும், அவர்கள் மீது சமூக அழுத்தங்கள் எதுவும் பள்ளி முதல் வீடு வரை எங்கும் இருக்கக்கூடாது என்பதற்காக அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சிறுவர்கள், மாணவர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுத்து வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் தனியார் மதுபான பாரில் சிறாரை அனுமதித்த நிர்வாகம் மீது அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை பல தரப்பிலும் எழுந்துள்ளது. ஆனால் காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமோ அதுக்குறித்து முறையான விசாரணை கூட இன்னும் நடத்தவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்