Skip to main content

எடப்பாடி பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள் சந்திப்பு!

Published on 05/10/2020 | Edited on 05/10/2020
bn

 

 

கடந்த ஒரு மாதமாகவே அதிமுகவில் அடுத்தடுத்த அதிரடிகள் நடைபெற்று வருகின்றது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அமைச்சர்கள் தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து அதிமுகவில் இதுதொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்கக்கூடாது என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டனர். இதனை அடுத்த சில நாட்களாக அமைதியாக இருந்த இந்த பிரச்சனை கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பூதாகரமாக வெடித்தது. பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இருவரும் காரசாரமாக பேசியதாக தகவல்கள் வெளியாகியது. 

 

இதனையடுத்து இதுதொடர்பான விவரங்களை பேசி தீர்ப்பதற்காக நேற்று செயற்குழு கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. முக்கியமாக வரும் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்தார். இந்நிலையில் வரும் 6ம் தேதி அனைத்து எம்எல்ஏக்களும் சென்னை வர அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்திருந்ததாக செய்திகள் வெளியாகியது. இந்நிலையில், ஓபிஎஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடப்பு அரசியல் தொடர்பாக இன்று காலை கருத்து தெரிவித்திருந்தார். இதற்கிடையே தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதிப்பதற்காக மூத்த அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் உடன் முதல்வர் பேசி வருகிறார். தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்