Skip to main content

“துரை பாரதியின் மறைவு தமிழ் இதழியல் துறைக்கு பெரும் இழப்பு” - முதல்வர் இரங்கல்

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

senior journalist durai barathy passed away

 

மூத்த பத்திரிகையாளரும் கவிஞருமான  துரை பாரதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நக்கீரனில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் புதியதாகப் பத்திரிகையையும் தொடங்கி நடத்தி வந்தார். அதன்பிறகு வெவ்வேறு பத்திரிகைகளிலும் பணியாற்றியிருக்கிறார். துரை என்று பத்திரிகையிலும், வித்யா ஷங்கர் என்று கவிதையிலும், துரை பாரதி எனக் காட்சி ஊடகத்திலும் அடையாளப்படுத்திக் கொண்டவர். இந்நிலையில், நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.  இவரது மறைவுக்குத் தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் மூத்த பத்திரிகையாளர் துரை பாரதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ‘தமிழ்ப் புலனாய்வு இதழியலில் முன்னோடியாக விளங்கிய பல இதழியலாளர்களை உருவாக்கியவர் துரை பாரதி. பல ஆண்டுகளாகத் துடிப்போடு பணியாற்றிய துரை பாரதியின் மறைவு தமிழ் இதழியல் துறைக்கு பெரும் இழப்பு’ எனத்  தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம்; கைது செய்யப்பட்ட 2 பேருக்கு கால் முறிவு!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
2 persons arrested in the case of attack on the journalist suffered a broken leg

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேசபிரபு. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் வழக்கம்போல் கடந்த 24 ஆம் தேதி செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தால் நேசபிரபுவை சரமாரியாக வெட்டி தப்பி ஓடியுள்ளனர்.

இதில் நேசபிரபு படுகாயமடைந்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த நேசபிரபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலைத் தேடி வந்த போலீஸார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 2 பேருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது தடுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பிறகு இன்று நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

தமிழக பாஜக மாநிலத் தலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 26/01/2024 | Edited on 26/01/2024

 

பத்திரிகையாளர்களைக் கீழ்த்தரமாகப் பேசிவரும் தமிழக பாஜக மாநிலத் தலைவரைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (25-01-2024) மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த மு.அசீப் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நக்கீரன் ஆசிரியர், தி இந்து குழுமத்தின் தலைவர் என். ராம், சன் நியூஸ் தொலைக்காட்சி ஆசிரியர்  மு. குணசேகரன் எனப் பல்வேறு மூத்த பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.