பள்ளி கட்டணத்திற்காக வைத்திருந்த பணத்தை கணவர் சூதாடியதால், மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வடக்குமாட வீதியில் வசித்து வருபவர் சுரேஷ் பாபு. கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. சிந்தாதிரிப்பேட்டைக்குச் சென்று சூதாடுவதையும், மது அருந்திவிட்டு மனைவி புவனேஷ்வரியிடம் சண்டையிடுவதையும் அவர் வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒன்பதாம் வகுப்பு பயிலும் தனது மகனின் கல்விக் கட்டணத்திற்காக புவனேஷ்வரி சேமித்து வைத்திருந்த ரூபாய் 20,000- ஐ எடுத்து சுரேஷ்பாபு சூதாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பணத்தையும் அவர் இழந்ததால் மனமுடைந்த அவருடைய மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவனின் சூதாட்டத்தால் மனைவி தற்கொலை செய்துகொண்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது; தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து உரிய ஆலோசனைகளைப் பெறலாம்.