Skip to main content

சட்டமன்ற தந்தை என போற்றபட்ட சகஜானந்தா திருவுருவபடத்தை சட்டமன்ற வாளகத்தில் வைக்க கோரி முதல்வருக்கு கடிதம்

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

 

 

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் சிதம்பரத்தில்  நந்தனார் பெயரில் கல்வி சாலைகளை துவக்கி ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி அறிவு பெற தொண்டாற்றியவரும் 1890 .1959 சட்ட மேலவை உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றிய சட்டமன்றத்தின் தந்தை என போற்றப்பட்ட சுவாமி சகஜானந்தா  திருவுருவப்படத்தை சட்டமன்ற வளாகத்தில் நிறுவ விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் திருவரசு தமிழக முதல்வருக்கு மனு ஒன்று அனுப்பியுள்ளார். 

 

s

 

அந்த மனுவில்,  ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டமாக இருந்த போது ஆரணி அருகில் உள்ள மேல் புதுப்பாக்கம் கிராமத்தில் அண்ணாமலை அலமேலு தம்பதியினருக்கு 1890 ஆம் ஆண்டு சனவரி 27 ஆம் நாள் சுவாமி சகஜானந்தா பிறந்தார். கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் அருகேயுள்ள ஓமக்குளம் நந்தனார் மடத்தில் தங்கி நந்தனார் பெயரில் கல்விச்சாலையை தொடங்கினார். அனைத்து சமுதாய பெரியோர்கள் இடத்திலும் அன்பாக பழகியும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தன்னுடைய தமிழ் புலமையால் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி அதன் மூலம் கிடைக்கப்பெற்ற தொகையை வைத்து தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உண்டு உறைவிட பள்ளியை நிறுவினார்.

 

 இதில் வேலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, போன்ற பல்வேறு ஊர்களில் இருந்து மாணவர்கள் வந்து தங்கி கல்வி கற்றனர்.  சுவாமி சகஜானந்தா 1926 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்ட மேலவைக்கு நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் .    1932 ஆம் ஆண்டு வரை அவர் அந்தப் பதவியை வகித்தார். பிறகு 1936 முதல் 1947 வரை மீண்டும் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு செயலாற்றினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1947இல் சட்டப்பேரவை உறுப்பினரானார். 1959 ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி வரை அவர் காலமானர். தமிழ் புலமை  பெற்ற அவர் சட்டப்பேரவை, மேலவையில் அவர் ஆற்றிய உரை சட்டமன்ற குறிப்புகளில் உள்ளது .தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ள நல்ல பல திட்டங்கள் கிடைக்க சிறப்பாக பணியாற்றியுள்ளார். ஒழுக்க நெறிகளை பரப்பிய மகான் சுவாமி அவர்கள் சட்டமன்ற தந்தை என அழைக்கப்பட்டார்.

 


அவர் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்து பெருமைப்படுத்திய தமிழக அரசு சட்டமன்ற வளாகத்தில் சுவாமி சகஜானந்தா அவர்களின் முழு திருவுருவப்படத்தை நிறுவவேண்டும். சுவாமியின் பிறந்த நாளான ஜனவரி 27-ஆம் நளை அரசு விழா எடுக்க வேண்டும் எனவும், அவர் தொடக்கிய நந்தனார் பள்ளி நூற்றாண்டை கடந்த பள்ளியாக உள்ளது. இதனை போற்றும் வகையில் தமிழக அரசு விழா எடுத்து பெருமை சேர்க்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிபிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்