Skip to main content

தேர்வில் உதவிய அறை கண்காணிப்பாளர்; 34 மாணவர்களின் முடிவுகள் நிறுத்திவைப்பு

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

NN

 

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து நேற்று  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியது.

 

தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை திருப்பூர் மாவட்டமும், மூன்றாம் இடத்தை பெரம்பலூர் மாவட்டமும் பிடித்துள்ளன. தேர்வு எழுதிய 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி என 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38 சதவீதமும், மாணவர்கள் 91.45 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் உதகையில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 34 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உதகை அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வு எழுதிய 34 மாணவர்களுக்கு அறை கண்காணிப்பாளர் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பான விசாரணையில் அறை கண்காணிப்பாளர் மாணவர்களுக்கு உதவியது உறுதி செய்யப்பட்டது. இதனால் 34 மாணவர்களின் கணிதப் பாடத்திற்கான முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிற பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் வெளியாகி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே நாளில் குவிந்த கூட்டம்; உதகையில் போக்குவரத்து நெரிசல்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Crowds gathered in one day; Traffic jam in the ooty

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மலைப் பிரதேசமான உதகைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.கடந்த இரண்டு நாட்களாகவே சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், தற்போது இன்று அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர். இதனால் உதகையில் நகர்ப் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்ததால் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் ஒரு வழிச்சாலையாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சாலைகள் மாற்றப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்து வருகிறது. உதகை தாவரவியல் பூங்கா சாலை, தொட்டபெட்டா சாலை, கூடலூர் சாலை, பேருந்து நிலையம் செல்வதற்கான சாலை என அனைத்து சாலைகளிலும் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

Next Story

முதலில் தலைகாட்டிய சிறுத்தை; உடனே வந்த கரடி; வைரலாகும் வீடியோ

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
The leopard that first showed its head; The bear that came immediately; A viral video

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. நடமாடும் சிறுத்தையின் படத்தை வனத்துறை வெளியிட்டுள்ளது. 8 மோப்ப நாய்கள் உதவியுடன் சிறுத்தையை பிடிக்கும் பணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறையில் சிறுத்தை புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதேபோல் ஊட்டியில் குடியிருப்பு பகுதி ஒன்றில் சிறுத்தை ஒன்று நடமாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோ காட்சியில் சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்ல, அடுத்த நொடியே கரடி ஒன்றும் அதே குடியிருப்பு பகுதிக்கு வந்தது. இந்த காட்சிகள் இணையத்தில்  வைரலாக பரவி வருகிறது.