Skip to main content

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் ஆசிரியர்களுக்கு கோரிக்கை; உதயநிதி கலகல!

Published on 20/06/2023 | Edited on 20/06/2023

 

Request to Udayanidhi teachers not to borrow physical education classes

 

“விளையாட்டு வகுப்பை கடன் வாங்காதீர்கள். முடிந்தால் உங்கள் வகுப்புகளை எங்களுக்கு கடன் கொடுத்து மாணவர்களை விளையாட அனுமதியுங்கள்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

தஞ்சாவூரில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இவ்விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “ஆசிரியர்களுக்கு ஒரு கோரிக்கை. பள்ளிகள் எல்லாம் தொடங்கிவிட்டது. பொதுவாக பி.இ.டி வகுப்புகளை மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்கி, கணக்கு, அறிவியல் போன்ற தங்களது பாடங்களை நடத்துகிறார்கள். தயவு செய்து மாணவர்களுக்கான பி.இ.டி வகுப்பை கடன் வாங்காதீர்கள். முடிந்தால் உங்கள் கணக்கு அறிவியல் போன்ற வகுப்புகளை எங்களுக்கு கடன் கொடுத்து மாணவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும். இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முன்னிலையில் ஆசிரியர்களிடம் கேட்கிறேன்” என ஆசிரியர்களிடத்தில் கோரிக்கை வைத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்