Skip to main content

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி சென்னை வருகை:முழு பாதுகாப்பு வளையத்துக்குள் பழைய விமான நிலையம்

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

 


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இன்று  காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய தனது குடும்பத்தினருடன் சென்னை வருகிறார். இதற்காக பிற்பகல் 2.10 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வருகிறார்.  அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

 

பின்னர் விமான நிலையத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் காஞ்சீபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கு அத்திவரதரை தரிசனம் செய்கிறார். அதன்பிறகு ஹெலிகாப்டரில் மீண்டும் மாலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமானநிலையம் வருகிறார். அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.

 

r

 

13-ந் தேதி மாலை 4.35 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் ஆந்திர மாநிலம் ரேனிகுண்டா விமான நிலையத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புறப்பட்டு செல்கிறார்.

 

பின்னர் அங்கிருந்து காரில் திருமலை செல்கிறார். அன்று இரவு மலை கோவிலில் தங்குகிறார். மறுநாள் 14-ந்தேதி  காலை திருப்பதி வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்கிறார். அன்று மாலை திருமலையில் நடைபெறும் ஆர்ஜித சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.  அதன்பிறகு 15-ந்தேதி காலை ஜனாதிபதி தனது குடும்பத்தினருடன் ரேனிகுண்டா விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.


இதேபோல் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, வருகிற 13-ந் தேதி  பகல் 12.55 மணிக்கு மைசூரில் இருந்து தனி விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வருகிறார்.  சென்னையில் அவர் 2 நாள் தங்குகிறார். பின்னர் 15-ந் தேதி காலை 6.45 மணிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

 

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர் சென்னை வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக பழைய விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.


 

சார்ந்த செய்திகள்