Skip to main content

நாறும் ராமேஸ்வரம்...ஊக்குவிக்கப்படும் கட்டண கழிவறை?

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

புனித தலம் என்பதால் மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டு யாத்ரீகர்கள் கூடும் இடத்தில் அதிகளவில் கழிவறைகளை திறந்து வைக்க, அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்காமல், அடைத்தே வைத்திருப்பதால் நகரத்தில் சுகாதாரக்கேடு மட்டுமின்றி கட்டணக் கழிவறைகளை ஊக்குவிக்கின்றனர் நகராட்சி நிர்வாகம் என்கின்றனர் நகரத்து மக்கள்.

 

 

rameswaram tourist place govt toilets not maintain issue

 

 

 

வட காசிக்கு நிகரானது தென்னகத்துக் காசியான ராமேஸ்வரம். இந்தியா மட்டுமின்றி உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வந்து செல்லும் புனித தலம் என்பதால் நகரத்தினை தூய்மையாக வைக்க பெருமளவில் நிதியினை தருகின்றது மத்திய, மாநில அரசுகள். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாலும் நகராட்சி நிர்வாகம் கழிவறைகளை முறையாக பராமரிக்காமல், கழிவறைகள் அடைத்து  வைத்திருப்பதால் யாத்ரீகர்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு திறந்தவெளிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் முக்கிய பகுதிகளில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகின்றது.

 

 

rameswaram tourist place govt toilets not maintain issue

 

 

இதே வேளையில், இதனைக் காரணமாக வைத்து இப்பகுதிகளில் தனியார் கழிப்பறைகள் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. கழிவறைக்கு அதிக கட்டணம் வசூல் செய்யும் நிலைமை இப்பகுதியில் நிலவி வருவதால் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர் யாத்ரீகர்களும், பக்தர்களும் சேதமடைந்து மூடிய கழிவறைகளை சீரமைக்காமல், சுகாதார சீர்கேடு ஏற்பட வழி வகைகளை ஏற்படுத்தி வருவதுடன் தனியார் கழிவறைகளை நகராட்சி நிர்வாகம் ஊக்குவித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்