Skip to main content

யாரோ சொல்வதை நம்பி ஏதாவது பேசிவிடுகிறார் ரஜினி: தினகரன்

Published on 07/06/2018 | Edited on 07/06/2018
ttv dinakaran interview


அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதன்கிழமை பெங்களூவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவர், 
 

காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடக வர்த்தக சபை தடை விதித்திருப்பதற்கு தமிழகத்திலிருந்து எந்தவொரு கட்சியும், ரஜினிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ கருத்து தெரிவிக்காததற்கு காரணம் எனக்கு தெரியவில்லை. ஒருவேளை கருத்து தெரிவிக்காததற்கு ரஜினியின் நடைவடிக்கைகூட காரணமாக இருக்கலாம்.

 

 


காவிரி விவகாரத்தில் ரஜினி போராட்டமெல்லாம் ஒன்னும் செய்யவில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தான் ரஜினி சொல்லியுள்ளார். தூத்துக்குடி சம்பவத்தில் முதலில் நல்லாதான் பேசிக் கொண்டிருந்தார்.

பிறகு யார் பேச்சைக் கேட்டு கருத்து சொன்னார் என்று தெரியவில்லை. அதுபோலதான் 1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் குண்டுவெடிப்பிற்கு அண்ணா திமுக தான் காரணம் என்று சொல்லிவிட்டார். அதுபோல யாரோ சொல்வதை உண்மை என்று நம்பி ஏதாவது பேசிவிடுகிறார்.
 

ஜெயா டிவி வேண்டுமென்றாலும் எனக்கு தகுந்த மாதிரி என்னிடம் கேள்வி கேட்பார்கள். மற்ற ஊடகங்கள் எனக்கு சாதகமாக கேள்வி கேட்பீர்கள் என்று நான் எதிர்பார்க்க கூடாது. பொதுவாழ்விற்கு வந்த பிறகு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும்.

 

 


சமூகவிரோதிகள் என்கிறீர்களே எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள் என்று ஊடகத்தினர் கேட்கத்தான் செய்வார்கள் அதற்கு நான் பதில் சொல்லத்தான் வேண்டும். அதைவிடுத்து எனக்கு தெரியும் வேண்டும். கேட்காதீர்கள் என்று சொல்லக்கூடாது. ஆதாரத்தை கொடுக்க வேண்டும்.

பள்ளி பருவத்திலிருந்து நானும் ரஜினிகாந்த் ரசிகன் தான். எனக்கு அவரை பிடிக்கும் தான். சிவாஜியை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு அவர் உறவினரும் கூட அதற்க்காக அவர் ஏணி சின்னத்தில் நின்றபோது அவருக்காக நான் ஓட்டுபோடவில்லையே. நாங்கள் எல்லாம் அம்மா அவர்கள் கூட இருந்து சேவலுக்கு தானே வாக்களித்தோம். இவ்வாறு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்