Skip to main content

11 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Rain alert for 11 districts

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்