Skip to main content

கரோனாவால் இறந்த தந்தை, தனியாக இருக்கும் மாற்றுத்திறனாளி பெண்... குடிநீர் இணைப்பு கேட்டு கோரிக்கை..!

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

puthukottai keeramangalam woman seeks drinking water facility


புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள நெய்வத்தளி ராம்ஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. இவரது மகள் கலா (வயது 33), இரண்டு கால்களும் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. தனது தாய் இறந்த பிறகு தந்தையின் பாதுகாப்பில் இருந்துள்ளார் கலா. சில மாதங்களுக்கு முன்பு தந்தை ராஜாக்கண்ணுவுக்கும் கலாவுக்கும் திடீர் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றபோது ராஜாகண்ணுவுக்குக் கரோனா பாதிப்பு உள்ளதாக கூறியுள்ளனர். அடுத்த சில நாட்களில் ராஜாக்கண்ணு இறந்துவிட்டார். அவரது உடலை உறவினர்களிடம் கொடுக்கவில்லை. தனக்குப் பாதுகாப்பாக இருந்த தந்தையும் இறந்துவிட்டதால் கலா மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

 

இந்நிலையில், தி.மு.க சார்பில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளியான கலா, நான் யாருடைய பாதுகாப்பும் இல்லாமல் தனியாக வசிக்கிறேன். என்னால் நடக்க முடியாததால் எனக்கு தேவையான குடிதண்ணீர் தூக்கி வரக்கூட முடியாமல் தவிக்கிறேன். அதனால் எனக்கு குடிநீர் இணைப்பு பெற்றுத்தர வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்ல எனக்கு மோட்டார் பொறுத்திய நகரும் வண்டி வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். 

 

உடனே மாற்றுத்திறனாளியான கலாவுக்கு நிவாரணம் வழங்கிய ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன்,  குடிதண்ணீர் மற்றும் மோட்டார் வாகனம் கிடைக்க அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்வதாக கூறினார். மேலும் கலா கூறும்போது எனக்கு இலவசக் குடிநீர் இணைப்பு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

சார்ந்த செய்திகள்