Skip to main content

தடுப்பூசி பற்றாக்குறையால் பொதுமக்கள் தள்ளுமுள்ளு! 

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

The public is pushing for a vaccine shortage

 

திருச்சி மாநகரில் இன்று (14.07.2021) 6 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவருகிறது. திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் 3,200 கோவிஷீல்டு, 1,500 கோவாக்சின் தடுப்பூசிகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இன்று காலை முதலே பொதுமக்கள் முகாம்களைத் தேடிவர ஆரம்பித்தனா். ஆனால், முகாம்களில் வழக்கமாக கொடுக்கப்படும் டோக்கன் பல இடங்களில் சரியான நேரத்திற்கு கொடுக்கப்பட்டாலும், திருச்சி கலையரங்கம் முகாமில் இன்று சற்று காலதாமதம் ஆனதால், பொதுமக்கள் அந்த டோக்கனைப் பெற்றுக்கொள்ள முண்யடித்துக்கொண்டு, ஒருவரை ஒருவா் தள்ளிவிட்டு டோக்கனைப் பெற முயற்சித்தனா்.

 

கட்டுக்கடங்காத கூட்டத்தால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. காவல்துறை கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தும் எந்தவித பயனும் இல்லாமல் போனது. காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் நீடித்தது. மற்றொரு பக்கம் மருத்துவப் பணியாளா்கள் திணறடிக்கப்பட்டனா். பின்னா் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டு காவல்துறை கூட்டத்தை ஒழுங்குபடுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்