Skip to main content

எடப்பாடி பழனிசாமி இல்லத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் கைது (படங்கள்)

Published on 26/05/2018 | Edited on 26/05/2018


 

தூத்துக்குடியில்  துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டவர்கள் மீதும், நடத்தியவர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மக்களை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். துளியும் ஆட்சியில் இருக்க தகுதியற்ற கொலைகார எடப்பாடி அரசே உடனே பதவி விலக செய்ய வேண்டும். தூத்துக்குடி சம்பத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உடனே விடுதலை செய்ய வேண்டும். இணையதள சேவையை முடக்காதே போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கம் (DAA ) மற்றும் புரட்சிகர இளைஞர் கழகம் ( RYA)  சார்பில் இன்று காலை முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி போராட்டம் நடத்திய அவர்கள், முதல் அமைச்சர் வீட்டை நோக்கி செல்ல முற்பட்டபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். 

படங்கள்: அசோக்குமார்

சார்ந்த செய்திகள்