Skip to main content

தமிழகத்தில் உயருகிறது சொத்துவரி- தமிழக அரசு அரசாணை! 

Published on 01/04/2022 | Edited on 01/04/2022

 

 Property tax is rising in Tamil Nadu - Government of Tamil Nadu!

 

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

600 சதுரடிக்கு குறைவான பரப்பளவு உள்ள கட்டிடங்களுக்கு 25 சதவிகித சொத்துவரி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் புதியதாக இணைந்த பகுதிகளில் 600 முதல் 1200 சதுரடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு 50 சதவிகிதம் சொத்துவரி உயர்த்தப்படுகிறது. சென்னை பிரதான பகுதிகளில் 600 முதல் 1200 சதுரடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு   75 சதவிகிதமும், 1200 லிருந்து 1800 சதுரடி கொண்ட  குடியிருப்புகளுக்கு 100 சதவிகிதமும் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் 15 வது நிதி ஆணையம் கொடுத்த நிபந்தனைகளின் அடிப்படையில் சொத்துவரி உயர்த்தப்படுவதாகவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரியை உயர்த்த நிதி ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்