Skip to main content

பாலியல் தொந்தரவை தடுக்க தபால் அட்டை;திருவாரூர் மாவட்ட எஸ்.பி அறிமுகம்!!

Published on 16/10/2018 | Edited on 16/10/2018

பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளை தடுத்திடும் விதமாக பள்ளி மாணவிகளுக்கு தபால் அட்டைகளை வழங்கினார் திருவாரூர் மாவட்ட எஸ்.பி  விக்ரமன்.

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் துறையினர் சார்பில் பாலியல் தொந்தரவுகளிலிருந்து பெண்களை காப்பாற்றும் நோக்கும் தபால் அட்டைகள் வழங்கும் புதிய முறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் தொடங்கி வைத்தார்.

 

sp

 

அவர் மேலும் கூறுகையில் ". இந்த திட்டத்தின் மூலம் பள்ளி மாணவிகள் மட்டுமின்றி அவர்கள் கண்களுக்கும், காதுகளுக்கு எட்டும் பாலியல் தொந்தரவுகள் குறித்து தகவல்களை இந்த முகவரி எழுதப்பட்ட தபால் அட்டை மூலமாக தகவல்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அனுப்பி அது எங்களுக்கு கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை உடனே எடுக்கப்படும். இந்த திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு எதிரான செயல்கள் மற்றும் குற்றங்கள் தடுக்க வாய்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது, இத்திட்டம் மாவட்ட முழுவதும் செயல்படுத்தப்படும் ". என விக்ரமன் எஸ்.பி தொிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், காவல் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

 

இந்த நிகழ்ச்சியில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி தொடங்கும் நேரங்களிலும், முடியும் நேரங்களிலும் காவல்துறையினர் பள்ளி வளாகத்தின் அருகில் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

சார்ந்த செய்திகள்