Skip to main content

"தபால் வாக்குகள் முறையாக இல்லை"- ராதாபுரம் எம். எல்.ஏ பேட்டி!

Published on 06/10/2019 | Edited on 06/10/2019

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து சென்னை எழும்பூரில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக பல்வேறு செய்திகள், வதந்திகள் ஊடகங்களில் பரவி வருகிறது. பேசப்படும் பொருளாக ராதாபுரம் தொகுதி மாறி வருகிறது. முடிவாக பேச வேண்டும் என்பதற்காக தான் வந்திருக்கிறேன். ஏனென்றால் நீதிமன்றத்திலே இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், தானும் ஒரு வழக்கறிஞராக இருப்பதால், இது குறித்து மீடியாக்களில் பேசுவது முறையாக இருக்காது என்பதனால் தான் பேசவில்லை.

 

 "Postal Votes Not Proper" - Radhapuram M L.A. Interview!

 


ஆனால் உண்மை உறங்கி கொண்டிருக்கும் போது, பொய் ஊரை சுற்றி விடும் என்று சொல்வார்கள். அதனால் நான் பேச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறேன். இந்த தேர்தல் வழக்கு எவ்வாறு வந்தது என்றால், கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் நான் போட்டியிட்டேன். வாக்கு எண்ணிக்கையின் போது என்னை எதிர்த்து போட்டியிட்ட, திமுக வேட்பாளர் அப்பாவுக்கு விழுந்த தபால் வாக்குகளில் 201 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். எந்த அடிப்படையில் செல்லாதவை என்று அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் என்றால், அந்த 201 வாக்குகளும் முறையாக அட்டெஸ்டேஷன் செய்யப்படவில்லை. நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் அட்டெஸ்டேஷன் செய்திருப்பதால், இது தேர்தல் விதிமீறலுக்கு எதிரானது. இதில் பெருவாரியான வாக்குகளை ஒரு குறிப்பிட்ட நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் அட்டெஸ்டேஷன் செய்துள்ளார். இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டேன். இதனை ஏற்று தேர்தல் அதிகாரி என்னை வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

இதனை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது உயர்நீதிமன்றத்தில் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் அட்டெஸ்டேஷன் செய்தது தவறு என்று வாதிட்டேன். இதனை ஏற்காTத நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். அதில் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை ஆணையை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஆதாயம் பெற தமிழக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ராதாபுரம் மறுவாக்கு என்ணிக்கை குறித்து பேசி வருகிறார். இதை நான் உச்சநீதிமன்றத்திற்கு எடுத்து செல்வேன். மேலும் இந்த வழக்கின் முடிவில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார். நான் எதற்கும் பயப்படவில்லை. என்னுடைய வழக்கு சட்ட வினா சம்மந்தப்பட்ட வழக்கு.

ஆனால் அவருக்கும் ஒரு வழக்கு இருக்கிறது.  கொளத்தூரில் பெற்ற வெற்றியை எதிர்த்து, சைதை துரைசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நவம்பர் மாதம் விசாரணைக்கு வரவுள்ளது. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 ஆண்டுகள் வரை தேர்தலில் ஸ்டாலின் போட்டியிட முடியாது என்றார்.

அதிமுக எம்.எல்.ஏவின் பேட்டிக்கு பதிலளித்துள்ள திமுக வேட்பாளர் அப்பாவு, பல்வேறு தலைமை ஆசிரியர்கள் தான் 201 தபால் வாக்குகளில் அட்டெஸ்டேஷன் செய்துள்ளனர் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்