Skip to main content

நெருக்கடி காலத்தில் இரும்பு கட்டில்கள் தயாரித்து கொடுத்த பொன்மலை ரயில்வே பணிமனை! 

Published on 01/04/2020 | Edited on 01/04/2020

தென்னிந்திய ரயில்வேயில் மிகவும் முக்கியமான பனிமனை திருச்சியில் உள்ள பொன்மலை பணிமனை. இந்த பணியில் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆண்டுக்கு சுமார் 1,000 ரெயில் பெட்டிகளை பழுதுபார்ப்பது, புதுப்பிப்பது, சரக்கு ரயில்களில் இணைக்கப்படும் வேகன்கள் தயாரித்து கொடுப்பது , டீசல் என்ஜின்களை பரமரிப்பது ஆகிய பணிகள் இங்கு தொடர்ந்து நடைபெறும்.

 

 Ponnamalai Railway Workshop Preparing Iron Beds During Crisis


கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பொன்மலை ரெயில்வே பணிமனையும் மூடப்பட்டது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இந்திய ரயில்வே வாரியம் உத்தரவின் பெயரில்  பொன்மலை ரெயில்வே பணிமனையில் மருத்துவமனைக்கு தேவையான இரும்பு கட்டில்கள் தயாரிக்கும் பணியினை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பணியில் 20 தொழிலாளர்கள் மட்டும் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 60 இரும்பு கட்டில்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

பொன்மலையில் உள்ள திருச்சி கோட்ட தலைமை ரெயில்வே மருத்துமனைக்கு 10 கட்டில்கள் கொடுக்கிறார்கள். கரோனா பாதிப்பில் நோயாளிகள் வந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பொன்மலை ரயில்வே ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு ஒன்று ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள்.

 

 Ponnamalai Railway Workshop Preparing Iron Beds During Crisis


50 கட்டில்கள் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இரயிலுக்கு சம்மந்தமாக பொருட்களை தயாரித்து வந்த பொன்மலை ரயில்வே பணிமனை இந்த அவசரகால நெருக்கடி நேரத்தில் இரும்பு கட்டில்கள் தயாரித்து கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

எருமை முட்டி இழுத்து சென்ற பெண்ணுக்கு மேலும் ஒரு துயரம்

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Another tragedy for the woman dragged by the buffalo

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை எருமை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் ஒன்று இணையத்தில் வைரலாகிய நிலையில் அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேலும் ஒரு துயரம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே சென்னையில் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தது. அது மட்டுமல்லாது முதியவர்கள் சிலர் மாடு தாக்கி உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்திருந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள கிராமத்து தெரு என்ற தெருவில் நடந்து சென்ற மதுமதி என்ற பெண்ணை எதிர்புறத்தில் நடந்து வந்து கொண்டிருந்த எருமை மாடு எதிர்பாராத விதத்தில் முட்டியது. மேலும் கொம்பில் சிக்கிக்கொண்ட அப்பெண்ணை தாறுமாறாக சுழற்றியதோடு. அங்கிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு மதுமதியை இழுத்துச் சென்றது. இந்தக் காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் அந்தப் பெண்ணை மீட்க வந்தவர்களையும் எருமை மாடு முட்டியது. இதில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

Another tragedy for the woman dragged by the buffalo

பாதிக்கப்பட்ட மதுமதியை உறவினர்கள் திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அங்கு மதுமதியின் காலில் ஏற்பட்ட பலத்த காயத்துக்கு 48 தையலுக்கு மேல் போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் மதுமதியின் கால் தொடைப் பகுதி அழுகிவிட்டதாக தற்போது மருத்துவர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காலில் அழுகிய நிலையில் இருந்த சதையை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். அந்தப் பகுதியில் மற்றொரு காலில் உள்ள சதையை எடுத்து தைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் கொடுத்துள்ளனர்.

Next Story

மூட்டை மூட்டையாக வீசப்பட்ட மருத்துவ கழிவுகள்;  தனியார் மருத்துவமனை நிர்வாகம் அடாவடி

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
private hospital dumping medical waste near a government school in Karur

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு பள்ளிக்குச் செல்லும் சாலையின் இரண்டு புறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல் குவிந்துள்ளது. மேலும், ஒரு பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கும் நிகழ்வும் ஏற்படுகிறது. 

இந்த நிலையில் கரூர் மாநகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் நூற்றுக்கணக்கான கண்ணாடி பாட்டில்கள் சாக்கு மூட்டையில் நிரப்பி அந்தக் குப்பை மேட்டில் தூக்கி வீசப்பட்டுள்ளது. மேலும், அந்தத் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளின் விபரங்கள் அடங்கிய ஸ்கேன் சென்டர் சீட்டுகளும் சிதறிக் கிடந்தன.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்த போது, மருத்துவமனை நிர்வாகம் நேரில் வந்து பேசுங்கள் என்று அலட்சியமாகப் பதில் அளித்ததாகக் குற்றம் சாட்டினர். மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகை வைத்திருந்தும், அதை மதிக்காமல் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனை கழிவுகளை வீசி சென்றதால், அவ்வழியாக செல்லக்கூடிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், குடியிருப்பு பகுதி பொது மக்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.