Skip to main content

அரைநாளில் முடிந்த இடைக்கால பட்ஜெட் கூட்டம்; காலவரையின்றி ஒத்திவைப்பு! 

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

 

புதுச்சேரி சட்டப்பேரவையின்  இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.  கூட்டம் தொடங்கியதும் எழுத்தாளர் பிரபஞ்சன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ், தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீத்தா வேதநாயகம் ஆகியோர்  மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு  ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

n

 

இந்திய விமானி அபிநந்தனுக்கு சட்டமன்றத்தில் புகழாரம் சூட்டப்பட்டது. ' தேசமே போற்றி  பாராட்டிய வீரர் அபிநந்தன்' என முதல்வர் நாராயணசாமி புகழுரையாற்றினார்.

 

பின்னர் 2,703 கோடி ரூபாய்க்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். 

 

அப்போது சட்டப்பேரவையில் இருந்து முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யாததற்கும்,  ஆளுநருக்கு எதிரான முதலமைச்சரின் போராட்டம் உள்ளிட்டவற்றை கண்டித்தும் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க,  பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சி  உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன்பாக  முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். பின்னர் வெளிநடப்பும் செய்தனர்.     அதையடுத்து  புதுச்சேரி சட்டப்பேரவை கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக  சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவு பிறப்பித்தார்.

சார்ந்த செய்திகள்