Skip to main content

மூன்றாண்டு முடிவு- பதவி விலகுகிறாரா கிரண்பேடி!?

Published on 29/05/2019 | Edited on 29/05/2019

 

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்று இம்மாதத்தோடு மூன்றாண்டுகள் முடிவடையப்போகிறது.   இந்நிலையில் மூன்றாண்டு நிறைவையொட்டி சமூக வலைத்தளங்களில் கிரண்பேடி வெளியிட்டுள்ள பதிவுகளை வைத்து அவர் பதவி விலகப்போகிறாரா… என்கிற விவாதம் ஏற்பட்டுள்ளது புதுச்சேரியில்.

 

k

 

‘நான் எப்பொழுதும் மனசாட்சி வழிகாட்டுதலின்படியே பணியாற்றினேன். பணியாற்றிய நினைவுகளுடன் பறக்கும் நேரம் வந்துவிட்டது’ என புதுச்சேரி மக்களுக்கு உருக்கமாக குறிப்பிட்டுள்ள கிரண்பேடி, ‘என் மீது நம்பிக்கை வைத்து புதுச்சேரியில் சேவையாற்ற வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி. புதுச்சேரி தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், புதுச்சேரி நலனுக்காக ஆளுநர் மாளிகைக்கு ஒத்துழைப்பு அளித்த முதலமைச்சர் நாராயணசாமிக்கு நன்றி’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 
அதேசமயம் ‘புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற உயர்நீதிமன்ற உத்தரவு’க்கு எதிராக கிரண்பேடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘நீங்கள் எங்களுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்பட வேண்டும்’ என அனைத்து துறை செயலாளர்களுக்கும் முதல்வர் கடிதம் எழுதியுள்ளார், இது மிரட்டும் தொனியில் உள்ளது  என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்