Skip to main content

கவர்னர் வருகையினால் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு! மகா புஷ்கர பரபரப்பு

Published on 08/10/2018 | Edited on 08/10/2018
m1

 

நெல்லை தாமிரபரணியின் மகா புஷ்கர விழா 144 ஆண்டுகட்குப் பின் வருதால், பாவங்களைப் போக்க புனித நீராட வட புலத்தவர் உட்பட மக்கள் கூட்டம் லட்சக்கணக்கில் திரளும் என்ற எதிர்பார்ப்பிற்கேற்ப பிரச்சாரங்களும் சூடு பிடிக்கின்றன.
   இதில் முக்கிய அம்சமாக, வரும் 11ம் தேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் மகா புஷ்கர விழாவைப் பாபனாசத்தில் துவக்கி வைக்கிறார் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.


இந்த நிலையில் தாமிரபரணியின் வழியோர தீர்த்தஸ்தலங்களில் படிக்கட்டுகள் சில செப்பனிட்டும், பல செப்பனிடப்படாமலும் உள்ளன. கவர்னர் வருகையால் ஜடாயு தீர்த்தமான அருகன்குளம் படிக்கட்டுகள் சீரமைக்கும் பணிகள் வேகமெடுக்கின்றன.
   கவர்னர் வருகையை முன்னிட்டும், மக்களின் பாதுகாப்பு கருதியும் பரணிபாயும் வழியோரப் பகுதிகளை ஆய்வு செய்ய வந்த தென் மண்டல ஐ.ஜி.யான சண்முகராஜேஷ்வரன் நெல்லையில் முகாமிட்டுள்ளார். 

 

m2

 

பாபனாசம், கல்லிடைக்குறிச்சி, தாமிரபரணீஸ்வரர், மானோந்தியப்பர் உள்ளிட்ட படித்துறைகளை ஐ.ஜி. சண்முகராஜஸ்வரன பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, ஆற்றின் தன்மை குறித்து காசிநாதர் படித்துறை கமிட்டி தலைவர் வாசுதேவராஜா, செயலர் பண்ணை சந்திரசேகரன் ஆகியோரிடம் கேட்டறிந்தார். மேலும் அவர்களிடம் நீச்சல் தெரிந்தவர்கள் உள்ளார்களா? என்றும் கேட்டார்.   


பாதுகாப்பு கருதி பொதுவான அறிவுரைகளைக் கொடுத்துள்ளோம். பாதுகாப்பு தான் முக்கியம்.  அதற்காக வெளி மாவட்டங்களிலிருந்து போலீசார் வரவழைக்கப்படவுள்ளனர். புஷ்கரம் நடக்க பக்தர்களுக்குச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தர உள்ளோம் என்றார் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன்.


    ஐ.ஜி.யுடன் நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சராட்கர்,  நெல்லை எஸ்.பி.அருண்சக்திகுமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் வந்தனர்.

 

சார்ந்த செய்திகள்