Skip to main content

வசமாக சிக்கிய கமில் பாஷா : அச்சத்தில் சக அதிகாரிகள் 

Published on 18/04/2018 | Edited on 18/04/2018


 

nakkheeran


திருமங்கலம் சட்டஒழுங்கு உதவி ஆணையரான கமில்பாஷா லஞ்ச ஒழி்ப்பு போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார். மேலும் சில காவல்துறை அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  
 

இவரின் முகத்திரையை பிப்ரவரி 04-06-2017 ஆம் ஆண்டு வெளிவந்த நக்கீரன் வெளிச்சம் போட்டு காட்டியது. 
 

சென்னையில் மாணவர்கள் போராட்டம் என்றால் அது மெரினாவில் கூடிய ஜல்லிக்கட்டு போராட்டம்தான். அந்த போராட்டதில் 23ஆம் தேதி மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மயிலாப்பூர் காவல்நிலையத்தின் பின்புறம் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் அமைந்துள்ளது ரூதர்புரம். போராட்டத்தில்  ஈடுபட்ட மாணவர்கள் கடற்கரையில் இருந்து ஓடிவந்து ரூதர்புரத்தில் நுழைந்தனர். 

 

police


 

அந்த ரூதர்புரத்தில் நுழைந்த மாணவர்களை போலீசார் தேடினர். ராதாகிருஷ்ணசாலையில் 300 போலீஸ் குவிந்தது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த அண்ணா நகர் துணை ஆய்வாளர் பெரோஸ்கான் அப்துல்லா, திருமங்கலம் உதவி ஆணையர் காமில் பாஷா ஆகியோர் முதலில் அங்கிருந்த சிசிடிவி கேராவை உடைத்தனர். அதன்பிறகு பத்திரிக்கையாளரைகளை தாக்கி, பின்னர் அங்கிருந்த ஆட்டோவுக்கு தீ வைத்து காவல்துறையே கலவரத்தை தூண்டியது. அதற்கு முழுகாரணமாக இருந்தவர் இந்த கமில் பாஷா என்பதை நக்கீரன் சுட்டிகாட்டியது. “இதோ… ஆட்டோவுக்கு தீ வைத்த போலீஸ்!” என்ற தலைப்பில் நக்கீரன் வெளிய்ட்டது.  

கமில் பாஷா பணி ஓய்வுபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் தன்னுடைய பதவி முடிவதற்குள் தனக்கான ஆதாயத்தை பார்த்துக்கொள்ளாலாம் என்று  பல வகையிலும் தனது கைவசத்தை காட்டி வந்தார். 
 

இந்த நிலையில் தான் கொடுங்கையூரைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டர் செல்வம், தன்னுடைய பில்டிங் காண்ராக்ட் பிரச்சனையில் தீர்வுக் காணுவதற்காக பாஷாவிடம் பேச, பாஷா அதற்காக 6 லட்சம் எடுத்து வரச்சொல்ல அதே போல் செல்வமும் 13-ம் தேதி இரவு 8 மணி அளவில் பணம் கொண்டு சென்றுள்ளார். இருவரும் பணம் பறிமாற்றிக்கொள்ள, 8.40 திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் டிஎஸ்பி லவக்குமார் தலைமையிலான படை கமில் பாஷா அறையில் சோதனையிட்டனர். சோதனையின் போது கமில் பாஷா அறையில் உதவி காவல் ஆணையர் கமில் பாஷாவிடமிருந்து ரூ.2.5 லட்சம் ரொக்கப் பணமும், காண்ட்ராக்டர் செல்வத்திடமிருந்து ரொக்கப் பணம் ரூ.2.53 லட்சமும் கைப்பற்றினர்.

 

police


 

அப்போது அவர்களை கைது செய்யாத போலீஸார், பின்னர் அவர்கள் இருவரையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர்.  அதன்பிறகு விசாரனையில் மூலமாக  இவர்களிடம் வைத்திருந்த பணம் எந்த விதமான  ஆதாரமும் இல்லாத காரணத்தால் லஞ்சம் வாங்கியது உண்மை என்ற முறையில்  குற்றப்பிரவு 102 ,ஊழல் தடுப்பு பிரிவில் 13,(2) 13,(1) d கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அதன்பிறகு அரசு  பணியில் இருப்பவர்கள் லஞ்சம் புகாரில் ஈடுப்பட்டிருந்தாலோ அது நிருபணமாகியிருந்தாலோ  அவர்கள் மீது துறை ரீதியாக சஸ்பெண்ட் செய்வது வழக்கமாக எடுக்கப்படும் நடவடிக்கையே. இவர் மீதும் அதே நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. 
 

இதே வழக்கில் உதவி ஆணையர் கமில் பாஷாவின் தனிப்படையில் பணியாற்றும் ஜெஜெ நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன், குற்றப்பிரிவு தலைமை காவலர் ஜெகன், காவலர் சொக்கலிங்கம், வாகன ஓட்டுநர் தேவேந்திரன்,காவலர் ஆர்.ராஜேஷ் ஆகியோரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். விரைவில் அவர்களின் மீதும் வழக்கு பாயும் என்று லஞ்சம் ஒழிப்பு போலீசார் தெரிவிக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

மேலும் ஒரு பாலியல் வழக்கு; ரேவண்ணாவுக்கு ஜாமீன் மறுப்பு

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
nm

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க பெங்களூர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் கோரி எம்பி எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது இதில் குற்றத்தின் தீவிரத்தை கருதி ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க மறுப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா அவருடைய வீட்டில் பணிபுரிந்த பெண்கள் உட்பட பல பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோக்கள் வெளியாகி கர்நாடக அரசியலில் அதிர்ச்சியை கிளப்பியது. இது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஒரு வழக்கும், மைசூர் கே.ஆர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், பெங்களூர் சைபர் கிரைம் காவல் நிலையம் ஒரு வழக்கும் என  மூன்று காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் குறித்து கர்நாடக அரசு, சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை உருவாக்கி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா  ஒரு மாதம் தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த மே 31 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஒவ்வொரு வழக்கிலும் மூன்று முறை போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஹாசன் மாவட்டத்தில் பதிவான வழக்கிலிருந்து ஜாமீன் வேண்டுமென நேற்று மக்கள் பிரதிநிதிகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டது. இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வரவிருப்பதாக இருந்த நிலையில் நேற்று மேலும் ஒரு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பெங்களூரு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் அடிப்படையில் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் ஜமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவர் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. மூன்று வழக்குகள் இருக்கும் சூழ்நிலையில் நேற்று புதிதாக ஒரு வழக்கு பதிவாகி உள்ளது. அரசியல் செல்வாக்கு உள்ளவர் என்பதால் ஜாமீனில் வெளியே விட்டால் சாட்சிகளை அழிக்க நேரிடும். விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்ற காரணங்களை காட்டி ஜாமீன் வழங்கக் கூடாது என நீதிபதி முன்பு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற நீதிபதி, குற்றத்தின் தீவிரத்தை கருதி பிரஜ்வல் ரேவண்ணா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story

ஓமலூரில் கலப்பட மதுபானம் விற்பனை; 5 பேர் கைது

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sale of adulterated liquor at Omalur; 5 people arrested

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 62 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராய மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கலப்படம் மதுபானம் விற்கப்பட்டது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாதாரண உடையில் காவல்துறையினர் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது கலப்பட மதுபானம் விற்று வந்த 5 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கலப்பட மது பாட்டில்கள், செல்போன், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.