Skip to main content

11 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவிகிதம்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

Percentage of registered voters as of 11 am ... Election Commission announcement!

 

தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது  தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

 

காலை முதலே வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி 26.29 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் நாமக்கல்லில் அதிகபட்சமாக 28.33 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக  நெல்லையில் 20.98 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் மட்டும் காலை 11 மணி நிலவரப்படி 23.67  சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு  தெரிவித்துள்ளார்.  

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பதவியேற்பு தீவிரம்;குடியரசுத் தலைவருடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு!

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
Inauguration intensity-BJP leaders meet the President of the Republic

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தனிப் பெரும்பான்மை என்ற நிலையை இழந்து கூட்டணி ஆட்சியையே மத்தியில் பாஜக அமைக்க உள்ளது. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 293 இடங்களில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது. இதனையொட்டி டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.

17வது மக்களவையை கலைக்க குடியரசுத் தலைவருக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரைக்க உள்ளதாகவும்,  வரும் சனிக்கிழமை ( ஜூன்8 ) பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்பார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது டெல்லியில் குடியரசுத் தலைவர் இல்லத்தில் திரௌபதி முர்முவை சந்தித்து பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜநாத் சிங் ஆகியோர் நேரில் சந்தித்து அமைச்சரவையை கலைப்பதற்கான ராஜினாமா கடிதத்தையும் அதற்கான தீர்மானத்தையும் வழங்கினர். ஜூன் 8 ஆம் தேதி மோடி பதவி ஏற்கும் வரை அவர் காபந்து பிரதமராக மோடி நீடிப்பார் என தகவல்கள்  வெளியாகியுள்ளது.

Next Story

மோடி தொடர் பின்னடைவு; சவால் கொடுக்கும் முடிவு நிலவரம் !

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
Continued Modi backlash; Challenging decision situation

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் உரிய சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  9.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 283 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 255 இடங்களிலும், மற்றவை 23 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை விட காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது சுற்றிலும் மோடி பின்னடைவை சந்தித்துள்ளார். இரண்டாவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 14,503 வாக்குகளும் மோடி 9,505  வாக்குகளும் பெற்றுள்ள நிலையில் மோடி பின்னடைவைச் சந்தித்துள்ளார்.