Skip to main content

'ஓய்வூதியம் பெறும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்'-முதல்வர் அறிவிப்பு

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

'Pensioner women can also apply'-Chancellor notification

 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டு அதன்படி விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

முதல்கட்ட முகாம் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் பெறும் முகாம் வரும் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களைச் சரிபார்க்க கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தநிலையில் ஓய்வூதியம் பெறும் குடும்ப பெண்களும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக முதல்வர் தற்பொழுது தெரிவித்துள்ளார்.

 

சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்புகளின் அடிப்படையில், 'மாற்றுத்திறனாளி, ஓய்வூதியம் பெறும் குடும்பத்தின் பெண்களுக்கும் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.  ஆகஸ்ட் 18 முதல் 20 வரை ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த பெண்கள்  விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

2023-24 டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
2023-24 TASMAC Income Increase

தமிழகத்தில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் 45,885.67 கோடி ரூபாய் அதிகரித்திருப்பதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று (21.06.2024) காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் மாலை நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக ஆயத்தீர்வை துறைக்கு கீழ் இருக்கக்கூடிய டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக தமிழக அரசுக்கு கிடைத்திருக்க கூடிய வருவாய் தொடர்பான பட்டியல் தற்போது கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் கொள்கை விளக்க குறிப்பில் கிடைத்துள்ள தகவலின்படி 2023-24 ஆம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் 45,855.67 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்தாண்டை விட 1734.54 கோடி ரூபாய் கூடுதலாக டாஸ்மாக் வருமானம் கிடைத்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

Next Story

கள்ளச்சாராய மரணம்; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
counterfeiting liquor case ; CM consults with all District Collectors

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது முதல்வரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் முதல்வர் நடத்தி வரும் அவசர ஆலோசனையில்  மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்து வருகிறார்.