/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a72273.jpg)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இதில் டி என் பாளையம் வனச்சரகமும் அடங்கும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை வசித்து வருகின்றன. குறிப்பாக சிறுத்தை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். அவரது வீடு வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளை வீட்டு முன்பு உள்ள காலி இடத்தில் கட்டி விட்டு தூங்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை சரவணன் வந்து பார்த்தபோது இரண்டு ஆடுகள் மர்ம விலங்கால் கடிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் அவரது வீட்டு முன்பு ஏராளமானோர் கூடிவிட்டனர்.
பின்னர் இது குறித்து நம்பியூர் போலீசாருக்கும், டி.என்.பாளையம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு ஏதேனும் விலங்குகள் கால் தடயம் பதிவாகியுள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். மர்ம விலங்கு கடித்து இரண்டு ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பும்இதேபோல் மர்ம விலங்கு கடித்து கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூட்டம் சாட்டியுள்ளனர். இதையடுத்து அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)