Skip to main content

'பழனிக்கே பஞ்சாமிர்தம் வேணும்' - தட்டுப்பாட்டில் சிக்கிய பக்தர்கள்

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

 'Palanik wants Panchamirtam'-devotees caught in the trap

 

'பழனிக்கே பஞ்சாமிர்தமா... திருப்பதிக்கே லட்டா...' என்ற நகைச்சுவை சொல்லாடலை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்பொழுது பழனிக்கே பஞ்சாமிர்தம் வேண்டும் என்ற நிலை பக்தர்களை வாட்டியுள்ளது என்றே சொல்லலாம்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவிலான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வருகை எப்பொழுதுமே அதிகமாகக் காணப்படும். ஆனால் தற்போது சபரிமலை சீசன் என்பதாலும், அதேநேரம் பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு காரணமாக விடப்பட்ட விடுமுறையாலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக பழனி கோவில் நிர்வாகத்தின் தேவஸ்தானம் சார்பில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் முழுவதுமாக விற்றுத் தீர்ந்த நிலையில் அங்கு பஞ்சாமிர்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் அடிவார பகுதியில் விற்கப்படும் பஞ்சாமிர்த கடைகளில் உள்ள பஞ்சாமிர்தங்களும் விற்றுத் தீர்த்துள்ளதால் அங்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் கிடைக்காமலேயே திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து பக்தர்கள் தெரிவிக்கையில் “காலையிலிருந்து கால்கடுக்க நின்று தரிசனம் செய்துவிட்டு பஞ்சாமிர்தத்தை வாங்கலாம் என்று கடைக்குச் சென்றால் கடையிலும் கால்கடுக்க நின்றும் பஞ்சாமிர்தமே இல்லை. அடிவாரத்தில் உள்ள கடைகளிலும் பஞ்சாமிர்தம் இல்லை. என்னதான் கோவில் நிர்வாகமோ?” என சலித்துக் கொண்டு சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.