Skip to main content

“பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை மாதம் நடைபெறும்”-அமைச்சர் சேகர்பாபு  பேட்டி!!

Published on 03/01/2022 | Edited on 03/01/2022

 

"Palani Murugan Temple Kumbabhishekam will be held in July" - Interview with Minister Sekarbabu

 

பழனி தண்டாயுதபாணி கோவில் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பெண்கள் கலைக்கல்லூரியில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினர்களாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கர பாணி கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.  பின்னர் மலைக் கோயில் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அன்னதானக் கூடத்தில் ஆய்வு செய்து பக்தர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.

 

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசும் போது, தமிழக முதல்வரின் உத்தரவின்படி 659 திருக்கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பழனி முருகன் கோவிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த கும்பாபிஷேகப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். பழனியில் சித்த கல்லூரிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அடுத்த ஆண்டிற்குள் சித்தா மருத்துவ கல்லூரி மற்றும் சித்த மருத்துவமனை துவங்க உள்ளதாக கூறினார்.

 

"Palani Murugan Temple Kumbabhishekam will be held in July" - Interview with Minister Sekarbabu

 

இதில் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ. பி செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட ஆட்சியர் விசாகன், அறநிலையத்துறை ஆணையர் குமரகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்