Skip to main content

விமானம் மூலம் இந்தியா அனுப்பப்படுகிறார் அபிநந்தன்

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

 

பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தற்போது பாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.  அபிநந்தனை விடுவிக்கக்கோரி இந்தியா  இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் இந்திய வீரர் அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

 

a


 இதையடுத்து அபிநந்தன் லாகூரில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக் கப்படுகிறார்.   அபிநந்தன் லாகூரில் இருந்து விமானம் மூலம் நாளை இந்தியா வருகிறார்.   அபிநந்தன் டெல்லி அல்லது மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைவார் என தகவல்.  

சார்ந்த செய்திகள்

 

Next Story

மகன் செய்த கொலைக்குத் துணை நின்ற குடும்பத்தினர்; விசாரணையில் பகீர் தகவல்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
The family that supported the son's did illegal in delhi

தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர் நீரஜ் சோலங்கி. இவருக்கும், பூஜா என்பவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. பூஜாவின் மாமியார், அவரிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பூஜா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் பூஜாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அதில் அவருக்கு அழகான இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டுமே பெண் குழந்தைகளாக பிறந்ததில் பூஜாவின் கணவரான நீரஜ்ஜுக்கு பெருன் அதிருப்தியை தந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி பூஜா தனது குழந்தைகளுடன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மருத்துவமனை விட்டு வெளியே வந்த பூஜா, ரோஹ்டக்கில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு செல்ல விரும்பியுள்ளார். ஆனால் அவரது கணவர் நீரஜ் சோலங்கி, குழந்தைகளை தனது காரில் ஏற்றிக்கொண்டு மற்றொரு காரில் பூஜாவை பின்தொடரும்படி கூறியுள்ளார். நீரஜ் தனது குடும்பத்தினருடன் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு முன்சென்றுள்ளார். இதை நம்பி பூஜாவும் தனது சகோதரருடன் நீரஜ்ஜை பின் தொடர்ந்து வந்துள்ளார். 

இதனிடையே, நீரஜ் தனது காரை வேறு பாதைக்கு மாற்றி அந்த இரண்டு பெண் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும், கொலை செய்யப்பட்ட குழந்தைகளை நீரஜின் குடும்பத்தினர் புதைத்துள்ளனர். இதற்கிடையே, கார் வேறு பாதைக்கு சென்றவுடன் பூஜாவின் சகோதரர் நீரஜை செல்போன் மூலம் அழைத்துள்ளார். ஆனால், அழைப்பு இணைக்கப்படவில்லை. இதில் சந்தேகமடைந்த பூஜாவின் சகோதரர் இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியபோது, இரட்டை பெண் குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, பூஜா கொடுத்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தைகளின் உடல்களை தோண்டி எடுத்தனர். மேலும், அந்த உடல்களை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு பெண் குழந்தைகளை கொலை செய்த தந்தைக்கு குடும்பத்தினரே உறுதுணையாக இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“உடல்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் பரவாயில்லை...” - டெல்லி அமைச்சர் உறுதி

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Delhi Minister on hunger strike demanding supply of water

தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும், ஹரியானா அரசு டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரில் பற்றாக்குறை ஏற்பட்டதால், டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக டெல்லி அரசு குற்றம் சாட்டி வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இன்னும், சில பகுதிகளில் வாழும் மக்கள் டேங்கர் லாரியை நோக்கி முண்டியடித்துக் கொண்டு தண்ணீரைப் பிடிப்பதற்காக காலி குடங்களுடன் செல்லும் காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனிடையே தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், தண்ணீர் வீணாவதைத் தடுக்கவும் டெல்லி நீர்வளத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

சில தினங்களுக்கு டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவ வேண்டும் என உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசு முதல்வர்களுக்கு டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடிதம் எழுதியிருந்தார். ஆனால், ஹரியானா அரசு உரிய தண்ணீரை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைக் கண்டித்து அம்மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், டெல்லி மக்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை ஹரியானா அரசு வழங்கக் கோரி டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 21ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். அவரது உண்ணாவிரதம் இன்று (24-06-24) நான்காவது நாளாக தொடர்கிறது. இதனால், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். 

இதனிடையே டெல்லி அமைச்சர் அதிஷி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “இன்று எனது காலவரையற்ற உண்ணாவிரதத்தின் நான்காவது நாள். டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளேன். டெல்லிக்கு சொந்தமாக தண்ணீர் இல்லை. தண்ணீர் அனைத்தும் அண்டை மாநிலங்களில் இருந்து வருகிறது. கடந்த 3 வாரங்களாக ஹரியானா மாநிலம், டெல்லி மக்களுக்கு தண்ணீர் விநியோகத்தை குறைத்துள்ளது.

நேற்று மருத்துவர் வந்து என்னை பரிசோதித்தார். என் பிபி குறைகிறது, சுகர் குறைகிறது, உடல் எடை குறைகிறது என்றார். கீட்டோன் அளவு மிகவும் அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். கீட்டோன் அளவு இவ்வளவு அதிகரிப்பது நல்லதல்ல என்று மருத்துவர் அறிவுறுத்தினார். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் எனது உடல்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், என் உடல் எவ்வளவு வலியில் இருந்தாலும், இந்த உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எனது தீர்மானம் வலிமையானது. 28 லட்சம் டெல்லி மக்களுக்கு ஹரியானா அரசு தண்ணீர் வழங்கும் வரை எனது உடல்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் உண்ணாவிரதத்தைத் தொடருவேன்.