Skip to main content

ரூட் தல பிரச்சனை; 30 மாணவர்களைக் கல்லூரியில் நிரந்தரமாக நீக்கக் கடிதம்

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

permanently expel 30 students from presidency college for road problem

 

சென்னையில் முக்கியக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் புறநகர் ரயில்களில் ரூட் தல பிரச்சனைகளில் ஈடுபட்டு, கல்லூரி மாணவர்களிடையே அவ்வப்போது கடுமையான தாக்குதல்களும் நடைபெற்று வருகிறது. மேலும் கல்லூரி மாணவர்களின் மோதலில் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் மோதலில் ஈடுபட்டு 44 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

இதனைத் தொடர்ந்து ரயில்வே போலீஸ் நேரடியாக கல்லூரிக்குச் சென்று ரயில்களில் ரூட் தல பிரச்சனையில் ஈடுபடும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். ஆனாலும், பிரச்சனை தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த ரூட் தல மோதலில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் 15 பேர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேரைக் கல்லூரி நிர்வாகம் சஸ்பண்ட் செய்து நடவடிக்கை எடுத்திருந்ததது. 

 

இந்த நிலையில், தொடர்ந்து ரயில் நிலையங்களில் மோதல் சம்பவம் நடைபெறக் காரணமான மாநிலக் கல்லூரி மாணவர்கள் 30 பேரைக் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்க ரயில்வே போலீஸ் மாநிலக் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
To the students and parents, cm M.K. Stalin's key instruction

2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர்.

மேலும் பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 47 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன். தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம். பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

திருச்சியில் நடைபெற்ற போட்டிகள்; வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Certificates for students who won competitions in Trichy

அல் ஹிதாயத் சிறுவர், சிறுமியர் பெண்கள் மதரஸா அறக்கட்டளை சார்பில் திருச்சியில் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் இன்ஜினியர் இப்ராஹிம் ஷா தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன், வக்கீல் சையத் மதானி, அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்பாஸ் அலி, அப்துல்லா நூரி, முகமது யூசுப் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். 

முகமது அலி ஜின்னா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி. பாபு, மாவட்ட இணை செயலாளர் சுலைமான், முன்னாள் திமுக வட்டச் செயலாளர் சிந்தாமணி பாலமுருகன், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகியும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட இணை செயலாளருமான பஜார் மைதீன், கோட்டை கிருஸ்து நாதர் ஆலயத்தின் தலைமை ஆயர் ராஜையா, புனித ஜான்பால் உரையாடல் மன்றம் இயக்குநர் சார்லஸ், தென்னிந்திய திருச்சபை கிறிஸ்டோபர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விழாவில் சையது சுல்தானா, ரஹிமான் பேகம், யாஸ்மின், பஜார் மைதீன், யாஸ்மின் பேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.