Skip to main content

மாவட்ட நீதிபதி தேர்வில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி! - அதிர்ச்சியில் நீதித்துறை!

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 

Only 6 pass the first examination for the post of District Judge!
                                                               சந்திரசேகர்

 

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள, 32 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில், 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

 

2,500 பேர் தேர்வு எழுதிய நிலையில், வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளது, நீதித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்விலும் ஒருவர்கூட பாஸ் ஆகவில்லை.  

 

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள 'சந்துரு லா அகாடமி' தலைவர் சந்திரசேகர், “கடந்த 2012ஆம் ஆண்டு, நீதிபதி ராமசுப்ரமணியம் தயாரித்த கேள்வித்தாள் போல தற்போது இல்லை. மேலும், கேள்வித்தாள் கடினமாக உள்ளது. இதில், மல்டிபிள் சாய்ஸ் கேள்வியாகக் கேட்கிறார்கள். ஒரு கேள்வியைப் படிக்க அரைமணி நேரம் ஆகிறது. அதனால், நேரமின்மை காரணமாகப் பல கேள்விகளுக்கும் பதில் எழுத முடியவில்லை. சரியான விதத்தில் கேள்விகள் கேட்கப்பட்டால், மாணவர்களுக்கு எளிதாக இருந்திருக்கும்.

  

எங்கள் பயிற்சி மையத்தில் பல வக்கீல்கள் படித்து வருகிறார்கள். அவர்கள், தங்களது அனுபவங்களை என்னிடம் கூறினார்கள். இனிமேலாவது, இந்த நிலை மாற வேண்டும். மாறினால், பலரும் வெற்றி பெற்று நீதிபதிகளாகத் தேர்வு ஆவார்கள். தற்போதைய தேர்வில், குறைந்த அளவில் வெற்றி பெற்றது வேதனை  அளிக்கிறது” என்கிறார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வி.ஏ.ஓ. கொலை வழக்கு; ஆகஸ்ட் 21இல் விசாரணை

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

vao case Hearing on August 21

 

கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

 

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து பகுதியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 55). இவர்  கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி பணியில் இருந்தபோது அலுவலகத்துக்குள் நுழைந்த 2 மர்ம நபர்கள் அரிவாளால் லூர்து பிரான்சிஸை வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி லூர்து பிரான்சிஸ் பரிதாபமாக இறந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.

 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த வழக்கில் 52 சாட்சிகள் அடையாளம் காணப்பட்டு, அரிவாள் உள்ளிட்ட 13 பொருட்கள் குறியீடு செய்யப்பட உள்ளன.

 

 

Next Story

ராமஜெயம் கொலைவழக்கு; உண்மை கண்டறியும் சோதனைக்கு ரவுடி மறுப்பு

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

Rowdy refuses fact finding test Ramajayam case

 

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலைவழக்கு தொடர்பாக விசாரணை செய்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் தமிழகத்தில் பிரபல ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவெடுத்தனர். அது தொடர்பாக அவர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

 

மோகன் ராம், சாமி ரவி, தினேஷ், நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம் , சிவா (எ) குணசேகரன் ஆகியோருடன் கடலூர் சிறையிலிருந்த செந்தில் ஆகிய 13 பேரும் கடந்த 1 ஆம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர். 

 

சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி. தான் இது தொடர்பான மனுவை தாக்கல் செய்ய முடியும் என எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அந்த வழக்கை நவம்பர்  7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி மனு தாக்கல் செய்தார். வழக்கின் விசாரணை 7 ஆம் தேதி அன்று விசாரிக்கப்பட்டது. அதில் ஆஜரான 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே இது முறையாக பின்பற்றப்பட வாய்ப்பில்லை. என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். 

 

அதனையடுத்து வழக்கை 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார். அதனையடுத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் உண்மை கண்டறியும் சோதனைக்கு  சத்யராஜ், லெட்சுமி நாரயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா (எ) குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6ல், நீதிபதி சிவக்குமார் முன்பு ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர். தென்கோவன் (எ) சண்முகம் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. 

 

மேலும், இந்த வழக்கில் மோகன் ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களை வரும் 17 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.