Skip to main content

மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு கோயில்களில் இனி கட்டணமில்லை - புதிய திட்டத்தை துவக்கிவைத்த முதல்வர்!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

nm

 

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருக்கோயிலில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்குக் கட்டணமில்லை என்ற திட்டத்தினை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (08.12.2021) தொடங்கிவைத்தார். அப்போது மாற்றுத்திறனாளி ஜோடியினருக்கு அதற்கான உத்தரவையும் அவர் வழங்கினார். இதன் மூலம் தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களிலும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக திருமணம் செய்துகொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார். தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டுவரும் நிலையில், புதிய முயற்சியாக தற்போது இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்