Skip to main content

வெளிமாநிலத்தில் நீட் தேர்வு: தமிழக மாணவர்களுக்கு உதவ முன்வந்த பல்வேறு தரப்பினர்

Published on 04/05/2018 | Edited on 04/05/2018
NEET


நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலத்திற்கு சென்று எழுத முடியாத தமிழக மாணவர்களுக்கு உதவ பல்வேறு தரப்பினர் முன்வந்துள்ளனர். 


நீட் தேர்வு எழுத உதவி தேவைப்படும் மாணவர்கள் உடனே என்னை அணுகவும் என்று நாகை தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். தொடர்புக்கு:
 

 9940738572, 9092020923, 04365 _247788.
 

நீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுத பொருளாதார ரீதியாக சிரமப்படும் நாகை தொகுதிக்கு உட்பட்ட  மாணவ, மாணவிகள் உடனடியாக என்னை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு தேவைப்படும் பொருளாதார உதவிகள் நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
 


நீட் தேர்வு எழுத ராஜஸ்தானுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு ஜெய்பூரில் உணவு, தங்கும் இடம், போக்குவரத்து வசதிகளை செய்து தரத் தயாராக இருப்பதாக ராஜஸ்தான் தமிழ் சங்கம் அறிவித்துள்ளது. அதற்காக97907 83187 என்ற எண்ணில் முருகானந்தம் என்பவரையும், 86969 22117 என்ற எண்ணில் சௌந்தரவல்லி என்பவரையும் 73570 23549 என்ற எண்ணில் பாரதி என்பவரையும், தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 


இதேபோல் கேரளா மற்றும் ராஜஸ்தானுக்கு செல்ல ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஐஏஎஸ், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மன்றம் உணவு, தங்கும் இடம், போக்குவரத்துக்கு உதவ முன்வந்துள்ளது. அதற்காக 96772 08927 என்ற எண்ணுக்கு மனோஜ் என்பவரைத் தொடர்பு கொள்ளுமாறு சமூக வலைதளங்களில் உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது.
 

கேரளா செல்லும் மாணவர்களுக்கு, உணவு, உறைவிட வசதிகளை ஏற்பாடு செய்ய டிடிவி தினகரன் சார்பில் சிலர் முன்வந்துள்ளனர். உதவி தேவைப்படுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுமாறு தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

NEET

 

சார்ந்த செய்திகள்